Tuesday, August 23, 2016

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு













பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 

பலகோடி நூறாயிரம் 
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி 
ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற 
மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும் 
சுடராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.   

Monday, August 22, 2016

காமாட்சி குங்கும மகிமை




காமாட்சி குங்கும மகிமை
குங்கும மாவது குறைகளைத் தீர்ப்பது
குங்கும மாவது குடியினைக் காப்பது
குங்கும மாவது கணம தளிப்பது
குங்கும மாவது கொல்வினை தீர்ப்பது.

விதிதனை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனை காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனை யாள்வதும் குங்கும மாமே.

தஞ்சமென்றோரைத் தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக் கபய மளிப்பதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே

நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்கும மாமே.

செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழலைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்க ளடக்கி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்சித்த குங்கும மாமே.

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்கும மாமே.

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடுஞ் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

சிவசிவ என்றுத் திருநீறணிந்த பின்
சிவகாமி யேயெனச் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களிப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்கும மாமே.

எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்குக்
குவிநிதி யீவதும் குங்கும மாமே.

அஷ்ட லட்சுமி அருள தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டந் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய்ச் செய்வதும் குங்கும மாமே.

குஷ்டம் முதலான மாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினைக்
கிட்டவே செய்வதும் குங்கும மாமே.

பட்டகாலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர் தவிர் குங்கும மாமே.

சித்தந்தனைச் சுத்தி செய்வதற்கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதன்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீட்டை வீரே.

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகொள்
செஞ்சுடராகுமோர் காஞ்சி காமாட்சியின்
கஞ்ச மலர் முகந்தன்னிற் றிகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்கும மாமே.

Monday, February 15, 2016

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்.





பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய 
             குமாரஸ்தவம்.

ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:

ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஓம் சுபநிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம:
ஓம் சுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:

ஓம் கவிராஜ பதயே நமோ நம:
ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இகபர பதயே நமோ நம:
ஓம் புகழ்முநி  பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம:
ஓம் நயநய பதயே நமோ நம:

ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
ஓம் குஞ்சரி பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம:
ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம:
ஓம் சுபோத பதயே நமோ நம:
ஓம் (வ்)வியூஹ பதயே நமோ நம:
ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம:

ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம:
ஓம் ப்ராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம:
ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம:

ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம:
ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம:
ஓம் குமார பதயே நமோ நம:

குமாரஸ்தவம் முற்றிற்று.
  

Thursday, January 28, 2016

சிவபெருமான் 108 போற்றி













சிவபெருமான் 108 போற்றி 
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பாலா போற்றி
ஓம் அறியோய் போற்றி

ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி  
ஓம் அறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் ஆலவாய போற்றி
ஓம் ஆருரா போற்றி

ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி

ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏறூர்ந்தாய் போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவா போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி

ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி

ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் சடையா போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சாதாசிவ போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறந்தாய் போற்றி
ஓம் சித்தா போற்றி
ஓம் சீரா போற்றி

ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கனா போற்றி
ஓம் செம்பொன்னா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி

ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயுமானவா போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவதேவா போற்றி

ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி

ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி

ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முக்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி