Thursday, September 29, 2011

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க




குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க கீழ் காணும்  சரஸ்வதி  ஸ்லோகத்தை படிக்கலாம்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!   

Sunday, September 18, 2011

குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க

குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க, 
சங்கீத துறைகளில் மேலோங்க கீழ் காணும் மந்திரத்தை 32
முறை உச்சரிக்கச் செய்யலாம். 
குழந்தைகளால் முடியாமற் போனால் பெரியவர்கள்
அவர்கள் கேட்கும்படி ஜெபிக்கலாம்.
 வார நாட்களில் புதன் விஷேசம் .
நெய்வேத்யமாக  கற்கண்டு பொங்கல் படைத்து,
 தேவியை வெண்பூக்களால் அர்ச்சிக்கலாம் அல்லது வாசனை மலர்களாலும் அர்ச்சிக்கலாம்.
சரஸ்வதி பூஜையன்று தவறாமல் இந்த வழிபாடு  செய்து நலம் பெறுவோம்.

 
ஓம் ஐம் ஸ்ரீ வீணாயை
மம சங்கீத வித்யாச
ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா!

Thursday, September 15, 2011

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் 
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி 
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் 
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.        

*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!