Thursday, March 24, 2011

யாதுமாகி நின்றாய் காளி

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய் 
தீது நன்மை எல்லாம் காளி 
தெய்வ லீலை அன்றோ 
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய் 
இன்பமாகி விட்டாய் காளி
என்னுள்ளே புகுந்தாய் பின்பு
நின்னை அல்லாமல் காளி
பிரிது நானும் உண்டோ ?
அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் காளி
தொல்லை போக்கி விட்டாய்

 
மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment